முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிமற்றும் அவரது கணவர் முருகன்ஆகியோரை சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி நளினியின் தாயார் பத்மா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் சிறைத்துறை தலைவர் சுனில்குமார் சிங் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,‘‘வேலூர் சிறையில் இருக்கும் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகியோரை புழல் சிறைக்கு மாற்றக்கோரி ஏற்கெனவே நளினி அளித்த மனுகரோனா சூழலால் நிராகரிக்கப்பட்டு விட்டது.
ஏற்கெனவே பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது என்பதால் அவர்களை ஒரே சிறையில் அடைக்க முடியாது. ஒருவேளை முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை ஒரே சிறையில் அடைத்தால் அது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என ஏற்கெனவே உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே நளினி மற்றும் முருகன் ஆகியோரை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்”என அதில் தெரிவித்துள்ளார்.