தமிழகம்

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை  

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அபிராமியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்லில் உள்ள பிரசித்திபற்ற அபிராமியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன்செய்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் இருந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மோப்பநாய் மேக்ஸ் மற்றும் மெட்டல்டிடெக்டர் ஆகியவற்றுடன் கோயிலுக்கு விரைந்து போலீஸார் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர்.

20-க்கும் மேற்பட்ட போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில் போன் வந்த எண்ணுக்கு போலீஸார் பேசியபோது, அந்த நபர் மதுபோதையில் உளறியது தெரியவந்தது.

போன் எண்ணைக்கொண்டு பேசிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர். அபிராமியம்மன் கோயிலில் வெடிகுண்டு சோதனையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT