காவல் துறை அதிகாரிகளின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் நீட் தேர்வு நடைபெற்ற மையங்களில் ஒன்றான கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்றுகாவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காவல் துறை அதிகாரிகளின் பெயர்களில் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் போலியான கணக்குகளை தொடங்கி,அதன்மூலம் மோசடி நடத்தமுயன்ற சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம்போலீஸார் வழக்கு பதிந்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம்தொடர்பாக போலி கணக்குகளை தொடங்கிய கும்பலின் 2 செல்போன் எண்கள்மற்றும் அவர்கள் கொடுத்தவங்கிக் கணக்கு விவரங்களைவைத்து துப்புத் துலக்கப்பட்டுவருகிறது. சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் கவனமுடன் அதை கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சஷாங் சாய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.