ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு உணவு வழங்க 4-வது கட்டமாக ரூ. 10 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
திமுக தலைவரும், கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க, ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு’ என்ற திட்டத்தை கடந்த ஜூலை 18-ம்தேதி தொடங்கினார். இதற்கான நிதியை தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கி வருகிறார். அதன்படி மக்களுக்கு உணவு வழங்க இதுவரை 3 கட்டங்களாக ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று 4-வது கட்டமாக ரூ. 10 லட்சத்தை சமையல் கலைஞர் துர்கா பிரசாத்திடம் வழங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.