ஆதார் அட்டை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆதார் மையங்கள் தொடங்கப்படவுள்ளன.
சென்னையில் 77.85 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் பதிவு செய் துள்ளனர். ஆதார் பதிவு பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஜூலை மாதத்தில் 18 மையங்களில் கூடுதலாக கணினிகள் பொருத்தப்பட்டன. கடந்த வாரம் 5 புதிய மையங்கள் சென் னையில் தொடங்கப்பட்டுள்ளன.
ஆதார் பதிவை முடிப்பதற்கு டிசம்பர் மாதம் வரை மட்டுமே அவ காசம் உள்ள நிலையில், இந்த பணிகளை மேலும் தீவிரப்படுத்துவ தற்காக சென்னையில் உள்ள 284 மாநகராட்சிப் பள்ளிகளிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
பொதுவாக ஆதார் மையங்க ளில் கைரேகை, விழித்திரை ஆகிய பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படும். விண்ணப்பதார ரிடமிருந்து சேகரிக்கப்படும் பெயர், வயது, பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் பிறகு கணினியில் ஏற்றப்படும். சென்னையில் கணினி பதிவேற்றம் செய்யும் பணிகள் தேக்கமடைந்துள்ளதால் ஆதார் பதிவு தாமதமாகி வருகிறது.
எனவே புதிதாக தொடங்கப் படவுள்ள மையங்களில் ஆதாருக்கான கைரேகை, விழித்திரை ஆகிய பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படுவது மட்டுமல்லாமல் விண்ணப்பதாரரின் பெயர், வயது, பெற்றோர் பெயர் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் உடனே கணினியில் ஏற்றப்படும்.