தமிழகம்

மாலை நிறைவு பெறுகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு

செய்திப்பிரிவு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2-ம் நாள் மற்றும் நிறைவு நாளான இன்று கருத்த ரங்கங்கள் முடிவில், முதல்வர் ஜெயலலிதா மாநாட்டின் மூலம் பெறப்பட்ட முதலீடுகள் குறித்த அறிவிப்பை வெளி யிடுகிறார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2-ம் நாளான இன்று, காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை, முதல் கட்ட கருத்தரங்கங்கள் நடக் கின்றன.

இதில், தமிழ்நாடு தொலை நோக்குத்திட்டம் 2023 அடிப் படையில், மிகப்பெரிய கட்ட மைப்பு திட்டங்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆகியவை கன்வன் ஷன் அரங்குகளில் நடக் கின்றன. மற்ற 6 கருத்தரங்க அரங்குகளில், தமிழ்நாடு- பொறியியல் துறையில் உலக மையம், தமிழ்நாடு- வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டு வாய்ப்புகள், தமிழ்நாடு- தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு கள் தலைப்புகளில் கருத்தரங் கங்கள் நடக்கின்றன.

இதுதவிர, கனடா, ஆஸ்தி ரேலியா நாடுகளில் முதலீடுகள் குறித்த கருத்தரங்கங்கள் நடக்கின்றன. பகல் 12 மணிமுதல் 2 மணி வரை, தமிழகத்தில் மின்சாரம் மற்றும் நீர்வளம், திறன் மேம்பாடு, மருந்து தயாரிப்பு மற்றும் உயிர் தொழில்நுட்ப துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள், ஜவுளித்துறையில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கொரிய நாட்டு முதலீடு தொடர்பான கருத்தரங்கங்கள் நடக்கின்றன.

மேலும், தமிழகத்தில் உள்ள தொழில் பெருவழித்தடங்கள், தொழில்பூங்காக்கள், முத லீட்டு மண்டலங்கள் குறித்த கருத்தரங்கம், அமெரிக்க - இந்திய தொழில் கவுன்சில் மற்றும் இத்தாலி நாட்டு முதலீடு தொடர்பான கருத்தரங் கங்களும் நடக்கின்றன.

பிற்பகல் 2 மணி முதல் 3.15 வரை, தமிழகம் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் பேசுகின்றனர். மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. இதில் முதல் வர் ஜெயலலிதா பங்கேற்று நிறைவு உரை நிகழ்த்துவதுடன், பெறப்பட்ட முதலீடுகள் குறித்த அறிவிப்பையும் வெளி யிடுகிறார்.

SCROLL FOR NEXT