தமிழகம்

உ.பி.யில் உள்ள சிந்து சமவெளி நாகரிக சின்னங்களை பாதுகாக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அழிந்து வரும் சிந்து சமவெளி நாகரித்தின் அடையாள சின்னங் களை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம் பக்பட் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு பகுதியான ஹரப்பாவின் தொன்மை சிதைக்கப்பட்டு வீடுகள் கட்டவும், விவசாய நில விரிவாக்கத்துக்கும் பயன் படுத்தப்படுவதாக ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் கட்டுரை வெளியாகி யுள்ளது. திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாட இருக்கும் நிலையில் இந்த செய்தி கவலை அளிக்கிறது.

1957-ம் ஆண்டு அகழ் வாராய்ச்சியில் வெளிச்சத் துக்கு வந்த இந்தப் பகுதிகள், இந்தியாவிலேயே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்பட்டது. கங்கை - யமுனை ஆறுகளுக்கு இடையே உள்ள இந்த இடத்தில் தொன்மை காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென் பட்டன. இந்தப் பகுதி, ஹரப்பா கலாச்சாரத்தின் இறுதிக் கட்டத்தை சுட்டிக் காட்டுவதாகும்.

சிந்து சமவெளி நாகரிகம் காப்பாற்றப்படவும், மிகப் பழமை வாய்ந்த இனத்தின் ஆதிகால பகுதிகளின் தொன்மை சிதையா மல் பாதுகாக்கவும் மத்திய பாஜக அரசும், உத்தரப்பிரதேச அரசும் உதவ வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் இந்தப் பிரச்சினையில் முழு அக்கறையோடும், சரித்திர சிந் தனையோடும் ஈடுபட்டு சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT