கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட, துணை மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் உடனடியாக கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவு: நர்சிங், முதலுதவி சிகிச்சை, ரேடியாகிராபி, பிஸியோதெரப்பி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக தங்கள் கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும். மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு திரும்புவதை கல்லூரி முதல்வர் மற்றும் துறை தலைவர்கள் உறுதிப்படுத்தவேண்டும். கல்லூரிக்கு வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க கல்லூரிகளுக்கு திரும்பும் மாணவர்களை, உடனடியாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடனடியாக மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.