“திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில், அரசி யல் காரணங்களுக்காக புகார் தெரிவிப்பவர்களுக்கு பதில் அளிக்க இயலாது” என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். செந்தில்குமார் தெரிவித் தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த வழக்கில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரி. அந்த வகையில் அவரை அதிகாரிகள் தொடர்பு கொள்வர். இச்சூழலில் வெளியில் இருந்து, அரசியல் காரணங்களுக்காக புகார் தெரிவிப்பவர்களுக்கு பதில் அளிக்க இயலாது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆரம்பத்தில் சிபிசிஐடி, சிபிஐ விசாரணை வேண்டுமென வலியுறுத்தினர். எனினும், அந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. தலைமறை வாக உள்ள யுவராஜ் தேடப் பட்டு வருகிறார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட் டுள்ளதால், எஸ்பி என்ற முறை யில், சிபிசிஐடி போலீஸார் என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். பின்னர் வழக்கு ஆவ ணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.