தமிழகம்

விமான நிலையங்களில் மோசமான கட்டுமானப் பணி: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மோசமான கட்டுமானப் பணி காரண மாகவே சென்னை, கோவா, கொல்கத்தா விமான நிலையங்களில் அடிக்கடி விபத் துகள் ஏற்பட்டு வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பசுபதி அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று கோவை வந்த அவர், செய்தியாளர் களிடம் பேசும்போது, ‘கோவை விமான நிலையத்தில் விரிவாக்கம் தேவைப்படு கிறது. ஆனால் நிலம் கையகப்படுத்துவது மாநில அரசின் பணி. எனவே, நிலத்தை மாநில அரசு கையகப்படுத்திக் கொடுத்தால், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளும்.

அரபு நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் ஏற்படுத்தித் தர, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான ஆயுத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

விமான நிலையக் கட்டுமானங்களில் உள்ள கோளாறு காரணமாகவே சென்னை, கோவா விமான நிலையங் களின் தரம் மோசமாக உள்ளது. அதே போல், கொல்கத்தா விமான நிலையத்தில் மோசமான கட்டுமான பணியால், காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு விமான சேவையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை இந்திய தொழில் வர்த்தக சபையினர் மனு அளித்தனர்.

உதகையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

ஏர் இந்தியா விமான நிறுவனம் நஷ்டமடைந்து வருகிறது, ஆனால் நலிவடையவில்லை. தனியார் நிறுவனங்கள் மத்தியில் நம்பகமான விமான சேவையை அளிக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் நிதி கட்டமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

விமானக் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. பயணியர் விமானக் கட்டணக் குறைப்பு செய்வதன் மூலம், விமான நிறுவனங்களிடையே ஆக்கபூர்வமான போட்டி நிலவுவதோடு, சுற்றுலாவும், பொருளாதாரமும் மேம் படும் என்றார்.

SCROLL FOR NEXT