தமிழகம்

கருணாநிதியின் திருவாரூர் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான கருணா நிதி, அங்கு பள்ளிக் கட்டிடம் திறப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற் பதற்காக செப்டம்பர் 20, 21 தேதி களில் சுற்றுப் பயணம் மேற் கொள்ள இருப்பதாக அறிவித்தி ருந்தார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வரும் 27, 28 தேதிகளில் திருவாரூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சி களில் கருணாநிதி பங்கேற்க இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 26, 27 தேதிகளில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங் களின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடக்க இருப்பதால் கருணா நிதியின் திருவாரூர் பயணம் மேலும் சில நாள்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT