சேலம் மாவட்ட போலீஸாரின் உடல் நலன் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்போன் செயலி மற்றும் அத்திட்டம் குறித்து போலீஸாருக்கு விளக்கமளிக்கும் மாவட்ட எஸ்பி., தீபா காணிகர். 
தமிழகம்

செல்போன் செயலியில் போலீஸாரின் உடல் தகுதி கண்காணிப்பு: போலீஸாரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த திட்டம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸாரின் உடல்நிலை, மனநிலையை மேம்படுத்திட, செல்போன் செயலி மூலம் அவர்களின் உடல் தகுதியைக் கண்காணிக்கும் திட்டம், எஸ்பி., தீபா காணிகரின் நேரடி கண்காணிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் பணி யாற்றுபவர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதனால், போலீஸாரின் உடல் நலன் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரிப்பதுடன், மன அழுத்தத்தி னால் அவர்கள் பணியில் தேவை யற்ற பிரச்சினைகள் உருவாகும் நிலை உள்ளது. எனவே, போலீஸா ருக்கு மன அழுத்தத்தை போக்கு வதற்கு மாநில காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸாரின் உடல்நிலை மற்றும் மனநிலையை மேம்படுத்தும் வகையில், செல்போன் செயலி மூலம் போலீ ஸாரின் உடல் தகுதி கண்காணிப்புத் திட்டம் மாவட்ட எஸ்பி., தீபா காணிகரின் நேரடி வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், மாவட்டத்தில் விருப்பமுள்ள காவல் அலுவலர்கள், ஆளிநர்களின் உடல் நலம் குறித்த அனைத்து விதமான விவரங்களும், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செல்போன் செயலியில் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பராமரிக்கப்படும். இந்த முன்னோடித் திட்டமானது, பெண் காவல் ஆளிநர்கள் 22 பேர், ஆண் காவல் ஆளிநர்கள் 28 பேர் ஆகியோரைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 மாத கால அளவில் செயல்படும் இந்த உடல் தகுதி கண்காணிப்புத் திட்டத்தில், பயிற்சி பெற்ற ஊட்டச் சத்து நிபுணர்கள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு, போலீஸாரின் உடல் நிலை கண்காணித்து, அவர் களுக்கு தகுந்த உடல் நல ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

மேலும், இத்திட்டத்தில் பங்கேற்கும் காவல் ஆளிநர்களுக்கு ஆரம்ப காலத்தில் பல்வேறு வகையான பரிசோதனை கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இக்காலக்கட்டங்களில் சிறந்த முன்னேற்றங்களை வெளிப் படுத்தும் காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு தக்க வெகுமதிகள் வழங்கப்படும் என்று மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் உடல் நலன் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் இத்திட்டத்தை செயல்படுத்தும் மாவட்ட எஸ்பி., தீபா காணிகர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT