மத்திய அரசின் தடை நீடிப்பதால் கொழும்பு வழியாக பட்டாசு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. மாற்றுவழி குறித்து ஆய்வு செய் யப்படும் என தொழில்துறை அமைச் சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழில் மற்றும் போக்குவரத்து துறைகளின் மானியக் கோரிக்கை கள் மீது நடந்த விவாதத்தில் தேமுதிக (அதிருப்தி) உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது:
செப்டம்பர் 9,10 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ரூ.1000 கோடியில் ‘அம்மா தொழில் முத லீட்டு நிதியம்’ ஒன்றை உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறை உள்ளிட்ட 10 துறைகளில் தமிழக அரசு ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.
சிவகாசியில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு உற்பத்தி செய்யப் பட்டாலும் ரூ.250 கோடி அள வுக்கே ஏற்றுமதி செய்ய முடிகிறது. ஏற்றுமதியை அதி கரிக்க தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி (குறுக்கிட்டு) பேசியதாவது:
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் ஏற்றுமதி பிரச்சினை குறித்து பேசினர். தூத்துக்குடி துறைமுகத்தில் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் நிறுத்தும் வசதி இல்லை என்பதால் இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இலங்கையில் நடந்து வந்த பிரச் சினை காரணமாக, கொழும்புவுக்கு பட்டாசு கொண்டுசெல்வதை மத்திய அரசு தடை செய்தது. அந்தத் தடை இன்னும் நீடித்து வருகிறது. இதற்கு மாற்று வழி குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.