தமிழகம்

தமிழக காங்கிரஸ் சார்பில் காணொலியில் எச்.வசந்தகுமாருக்கு இன்று நினைவேந்தல் கூட்டம்: மு.க.ஸ்டாலின், வைகோ பங்கேற்பு

செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் சார்பில், மறைந்த காங்கிரஸ் செயல் தலைவரும், கன்னியாகுமரி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் நினைவேந்தல் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்தியயூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்,மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக காங்கிரஸ் முன்னாள்தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், எம்.கிருஷ்ணசாமி பங்கேற்கின்றனர்.

தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நன்றியுரை வழங்குகிறார்.

SCROLL FOR NEXT