சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் 13 சிறப்பு ரயில்கள் கடந்த 7-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14-ம் தேதி வருகிறது. எனவே, மக்கள் சொந்த ஊர்களுக்கு நவ.12, 13-ம்தேதிகளில் பயணம் செய்ய டிக்கெட்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சிறப்பு ரயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட டிக்கெட்கள், முன்பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. ஏசி வகுப்பு பெட்டிகளில் மட்டுமே டிக்கெட்கள் காலியாக இருந்தன.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் சேவை இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும், தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிஇருப்பதால், தீபாவளிக்கு சொந்தஊர்களுக்கு செல்ல இப்போதேடிக்கெட்கள் முன்பதிவு செய்யத் தொடங்கி விட்டனர். மேலும்,ரயில்வே வாரியம் அனுமதித்த உடன் பயணிகள் ரயில்களின் சேவையைத் தொடங்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.