பொது போக்குவரத்தின் முக்கியத் துவம் மற்றும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது.
பொது போக்குவரத்துக்கான சர்வதேச அமைப்பு (யுஐடிபி) சார்பில் பொது போக்குவரத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள 92 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்நிலையில், செப்டம்பர் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் பொது போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது.
இதில், பொதுவான போக்குவரத்து வசதிகள் அதிகரிப்பதால் ஏற்படும் பயன்கள், அதற்கான அவசியங்கள், தற்போது உள்ள சவால்கள், பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் முறைகள், போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வழிகள் குறித்து விளக்கும் வகையில் சமூக வலைதளங்களிலும், பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் சென்னையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.