தமிழகம்

சிலை திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள மிகவும் பழமையான 3 கோயில்களில் உள்ள 8 உலோகச் சிலைகள் திருடுபோயின. இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.77 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மே மாதம் சென்னை மாம்பலம் அருகே திரைப்பட தயாரிப்பு நிறுவன மேலாளர் தனலிங்கம், அரசு அச்சக ஊழியர் கருணா கரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் எஸ்ஐ ஒருவர் உட்பட மேலும் சிலரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜசேகர்(43), அசோக் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன்(45) ஆகிய 2 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் சென்னை பெருநகர 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT