மத்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலி யுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
நாட்டில் விவசாயிகள் தற் கொலை செய்துகொள்வது அதி கரித்து வருகிறது. விவசாயி களின் நிலங்களை அரசு கையகப் படுத்தும் நில மசோதாவை 3 முறைகளுக்கு மேல் அவசர சட்டமாக்கி, நான்காவது முறையும் அந்த அவசர சட்டத்தைப் பிறப் பிக்க முடியாத நிலையில் மசோதா காலாவதியாகிவிட்டது. நில மசோதா பற்றிய முடிவை எதிர்க்கட்சியினரோடு கலந்து பேசி, கருத்து இணக்கம் கொண்ட அணுகுமுறையை மேற்கொண் டிருந்தால், நாடாளுமன்றம் சுமுக மாக நடைபெற்றிருக்கும்.
ஜனநாயகத்துக்கும், மதச்சார் பின்மைக்கும் விடை கொடுக்கும் மத்திய அரசின் அணுகுமுறை யில் பிரதமர் மாற்றத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்று வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கர்நாடக எழுத்தாளர் கல்புர்கி படு கொலைக்கு கண்டனம் தெரி வித்துள்ளார். “கர்நாடக மாநிலத் தைச் சேர்ந்த கல்வியாளரும், மூட நம்பிக்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தவருமான எழுத்தாளர் கல்புர்கி படு கொலை செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அரசும் நீதிமன்றங்களும் இதற்கொரு முடிவை ஏற்படுத்தி அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் ” என்று அவர் கூறியுள்ளார்.