தமிழகம்

மழையில் நனைந்து நூற்றுக்கணக்கான நெற்குவியல் சேதம்

செய்திப்பிரிவு

அறுவடைக்குப் பின் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக வாலாஜாபாத் தில் இருந்து தென்னேரி செல் லும் சாலையில் காய வைக்கப் பட்டிருந்த நூற்றுக்கணக் கான நெற்குவியல்கள் மழையால் சேதமடைந்தன.

வாலாஜாபாத் வட்டத்தில் தென்னேரி மற்றும் சுற்றி யுள்ள கிராமங்களில் அதிக அளவு விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர். தற்போது, பல்வேறு கிராமங்களில் 2-ம் போகம் நெல் அறுவடை முடிந்த நிலையில் நெல் மூட்டைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

அரசு நேரடி நெல் கொள் முதல் மையங்களில் ரூ.1500-க்கு வாங்கப்படும் நெல் தனியார் வியாபாரி களால் ரூ.900-க்கு மட்டுமே வாங்கப்படுகிறது. இவ்வாறு நெல்லை வாங்கும் தனியார் வியாபாரிகள் பலர் சில இடங் களில் விவசாயிகள்போல் சென்று நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விற் பனை செய்கின்றனர். இதற்கு சில அலுவலர்களும் உடந்தையாக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் விவசாயிகள் தாங்களே நேரடி நெல் கொள்முதல் மையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்காக வாலாஜா பாத்தில் இருந்து தென்னேரி செல்லும் சாலையில் பல இடங்களில் நெல்லை உலர்த்தி வருகின்றனர். அவ் வாறு உலர்த்தப்பட்ட நெல் குவியல்கள் திடீரென்று பெய்த மழையால் சேத மடைந்துள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "நேரடி நெல் கொள்முதல் மையங்களில் நெல்லை எடுக்க அறுவடை முடிந்து 15 நாட்கள் கூட ஆகிறது. அதுவரை நெல்லை பாதுகாத்து வைக்க இடமில்லை. இது போல் சாலையோரத்தில் உலர்த்து குவியலாக வைத்து பாதுகாத்து வருகிறோம். இடையில் மழை பெய்தால் இதுபோல் நெல் முழுவதும் நனைத்து சேதமடைந்து விடுகிறது. நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளின் நெல்லை மட்டுமே எடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், வியா பாரிகளின் நெல்லும் எடுக்கப் படுவதால் தங்கள் நெல்லை எடுக்க தாமதமாவதாக விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முதல் போகத் துக்கு திறந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் மூடப்பட்டதும் பல்வேறு இடங்களில் நெல் தேங்கி இருக்க காரணம் என்றும், கூடு தல் நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT