தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று திமுக சட்டப்பேரவை குழு துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப் பட்டதைக் கண்டித்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தன. வெளிநடப்பு செய்தது குறித்து பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் திமுக சட்டப் பேரவை குழு துணைத் தலைவர் துரைமுருகன் கூறியதாவது:
விஷ்ணுபிரியா மரணம்..
உயர் அதிகாரிகளின் அழுத் தம் காரணமாகவே விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தோழி தெரிவித்திருக்கிறார். விஷ்ணு பிரியா எழுதிய கடிதத்தில் 2 பக் கத்தை அவரது உறவினர்களிடம் அளித்துள்ளனர். அந்த கடிதத் தில் உள்ளது விஷ்ணுபிரியா கையெழுத்து இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ள னர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித் தால், சாட்சியங்களை திருத்தி மறைக்கவும் வாய்ப் புள்ளது. எனவே, விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இது தொடர்பாக பேரவையில் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):
விஷ்ணுபிரியா எழுதிய கடிதத்தை மூடி மறைக்கும் முயற்சியில் போலீஸார் ஈடு பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்.
எஸ்.விஜயதாரணி (காங்கிரஸ்):
விஷ்ணுபிரியா தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் உள் ளன. உண்மையை வெளிக் கொண்டுவர சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் தலித்களுக்கும், பணிக்கு செல்லும் பெண்களுக் கும் பாதுகாப்பு இல்லை.
எம்.ஆறுமுகம் (இந்திய கம் யூனிஸ்ட்):
தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல் லாத நிலை உள்ளது. பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கணேஷ்குமார் (பாமக):
அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பேரவை யில் அனுமதிப்பதில்லை. எந்தப் பிரச்சினை தொடர்பாக பேசினாலும் ஆய்வில் உள்ளது என கூறி, பேரவைத் தலைவர் அனுமதி மறுக்கிறார். விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாகவும் பேச அனுமதிக்கவில்லை.