தமிழகம்

ஒருபுறம் வைகை ஆற்றை சீர்ப்படுத்தும் மாவட்ட நிர்வாகம்: மறுபுறம் குப்பையைக் கொட்டி வீணாக்கும் மானாமதுரை மக்கள்- சமூக ஆர்வலர்கள் வேதனை 

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றை ஒருபுறம் மாவட்ட நிர்வாகம் சீர்ப்படுத்தினாலும், மறுபுறம் குப்பையைக் கெட்டி சிலர் ஆற்றை வீணாக்கி வருகின்றனர். இதனால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.

தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதிகளில் உருவாகும் வைகை ஆறு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக பாய்ந்து வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது.

வைகை ஆறு சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகே மணலூரில் இருந்து மானாமதுரை அருகே வேதியரேந்தல் அணை வரை 55 கி.மீ., பாய்கிறது.

ஆறு முழுவதும் சீமைக்கருவேல மரங்கள், நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டன. விவசாயிகள், சமூகஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வைகை ஆறு முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் மாவட்ட நிர்வாகம் சீரமைத்தாலும், மறுபுறம் மானாமதுரை பகுதி மக்கள் வைகை ஆற்றில் குப்பையை கொட்டி வருகின்றனர்.

சிலசமயங்களில் பேரூராட்சி ஊழியர்களும் குப்பையை கொட்டிவிடுகின்றனர். மேலும் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து வருகிறது.

இதனால் மீண்டும் வைகை ஆறு வீணாகி வருகிறது. இதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT