திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று கலந்துரையாடுகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத் தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்புப் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலைநடைபெறவுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து, ஆட்சியர் மற்றும் அதிகாரிகளி டம் பணிகள் குறித்து கேட்டறிய உள்ளார். மேலும் அவர், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் தனித் தனியாக நடைபெற உள்ள கலந் தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை கேட்டறியவுள்ளார். முன்னதாக அவர், திருவண்ணா மலை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத் தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதல்வர் பழனிசாமியின் வருகையையொட்டி, திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பராமரிப்பு இல்லாமல் இருந்த நீருற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியர் அலுவலகம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டுள் ளது. அலுவலகம் மற்றும் வளாகத் தில் உள்ள காலி இடங்களில் கிடந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மேலும், முதல்வர் பங்கேற்கும் விழாக் கூடம் உட்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலு வலக வளாகத்தில் காவல் கண் காணிப்பாளர் அரவிந்த் மேற் பார்வையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர். முதல்வர் பழனிசாமிக்கு கீழ்பென்னாத்தூரில் அதிமுக சார்பில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. ஆட்சியர் அலுவலகம் வரும் முதல்வரை, ஆட்சியர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.