கரூரில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் கேரம், செஸ் விளையாடும் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர். உடன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ். 
தமிழகம்

3 மாவட்ட கரோனா சித்த மருத்துவ மையங்களில் 1 மாதத்தில் குணமடைந்தோர் 1,152 பேர்: ஒருவர் கூட உயிரிழக்கவில்லை

கல்யாணசுந்தரம்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அலோபதி முறையில் சிகிச்சை அளிக்கப்படுகி றது. சில மாவட்டங்களில் சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கரூர், பெரம் பலூர், அரியலூர் மாவட்டங்களில் கரோனா நோயாளிகளுக்கென இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தனியாக சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சைகள் அளிக் கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் இந்த மையங்களில் சிகிச்சை பெற்று ஏறத்தாழ 1,152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் ஆக.1-ம் தேதி கரூரிலும் (122 படுக்கைகள்), ஆக.4-ம் தேதி பெரம்பலூரிலும் (200 படுக்கைகள்), ஆக.8-ம் தேதி அரியலூரிலும் (100 படுக்கைகள்) சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை கரூரில் 397 பேர் அனுமதிக்கப்பட்டு 292 பேர் குணமடைந்துள்ளனர். பெரம்பலூ ரில் 205 பேர் அனுமதிக்கப்பட்டு 190 பேர் குணமடைந்துள்ளனர். அரியலூரில் 713 பேர் அனுமதிக்கப்பட்டு, 670 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருப்பவர்கள் கூட, அவை கட்டுப்பாட்டில் இருந்தால் இங்கு விரைவில் குணமடைந்து விடுகின்றனர். இம்மூன்று சித்த மருத்துவ மையங்களில் ஒரு மாதத்தில் 1,152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு மாதத்தில் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார். எஸ்.கல்யாணசுந்தரம்


SCROLL FOR NEXT