மறைமலைநகர் அருகே பாஜக பிரமுகர் விஜயகணேஷ் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய் யப்பட்டார். இந்த கொலை தொடர் பாக 7 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மறைமலைநகரை அடுத்த பேரமனூரைச் சேர்ந்தவர் விஜய கணேஷ்(42). இவர், பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் பேரமனூர் வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்து வந்தார். வட்டி தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பேரமனூர் அருகே உள்ள சாமியார்கேட் பகுதியில் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் அவர் வீடு திரும்பியபோது, மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மறைமலை நகர் போலீஸார் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப் பினர். மேலும், ஐஜி மஞ்சுநாத், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கொலையாளி களை பிடிக்க வண்டலூர் டிஎஸ்பி முகிலன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட் டுள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் வட் டாரங்கள் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட விஜயகணேஷ், வட்டிக்கு பணம் அளித்து வந்த தாக கூறப்படுகிறது. பணத்தை வசூல் செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் உள்ளது. இதனால், அவரிடம் பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்புடைய நபர்களின் விவரங் களை விசாரித்து வருகிறோம்.
மேலும், கடைகளில் மாமூல் வசூலித்த அதே பகுதியைச் சேர்ந்த இருவரை அவர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்று கூறினர்.