தமிழகம்

சசிகலா வந்ததும் கட்சி ஒப்படைப்பது பற்றி முடிவு: அமைச்சர்

செய்திப்பிரிவு

அதிமுகவை யார் கையில் ஒப்படைப்பது என்பதை சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகையில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு 2 குழுக்களை அமைத்துள்ளது. இக்குழுவினர் ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் தவறிழைத்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். அதிமுகவை யார் கையில் ஒப்படைப்பது என்பது குறித்து சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

SCROLL FOR NEXT