தமிழகம்

தற்கொலை செய்து கொள்பவர்களில் 80 சதவீதம் பேர் படித்தவர்கள்: அரசு பொது மருத்துவமனை டாக்டர் தகவல்

செய்திப்பிரிவு

தற்கொலை செய்துக் கொள்பவர் களில் 80 சதவீதம் பேர் படித்தவர் கள் என்று சென்னை அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடலி யல் அறுவை சிகிச்சைத் துறை டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் தெரிவித்தார்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சைத் துறை சார்பில் ‘மீண்டு (ம்) வாழ்கிறோம்... மீள உதவுவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) நடை பெற்ற இந்த கருத்தரங்குக்கு இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சைத் துறை டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் தலைமை தாங் கினார்.

மருத்துவக் கண்காணிப் பாளர் ஷீலாராணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா கருத்த ரங்கை தொடங்கி வைத்தார். ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்த நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கில் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் பேசியதா வது: குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் சிலர் ஆசிட் குடித்து விடுகிறார்கள். ஒரு நொடியில் எடுக்கும் முடிவால், ஏற்படும் பாதிப்பு அதிகம். சாப்பிட முடியாமலும், பேச முடியாமலும் அவதிப்படுகின்றனர். அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர நீண்ட நாட்கள் ஆகும். ஆசிட் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வருபவர் களை 4 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை அறுவைச் சிகிச்சை செய்து காப்பாற்றுகி றோம். அரசு பொது மருத்துவ மனைக்கு ஆண்டுக்கு 250 பேர் ஆசிட் குடித்துவிட்டு சிகிச் சைக்காக வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய் துக் கொள்கின்றனர். இவர்களில் 1.35 லட்சம் பேர் இந்தியர்கள். 5 நிமிடத்துக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொள்கின் றார். ஒருவர் தற்கொலை செய்து உயிரை விடுகிறார் என்றால், அதே நேரத்தில் 20 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.

தற்கொலை செய்பவர்களில் 80 சதவீதம் பேர் படித்தவர்கள். தற்கொலை செய்பவர்களில் 34 சதவீதம் பேர் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள். 2009ம் ஆண்டில் தமிழகத்தில் 14,424 பேர் தற்கொலை செய்துக் கொண் டனர். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT