தமிழகம்

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு நாய்களை பிடித்து அகற்றும் பணி மும்முரம்

செய்திப்பிரிவு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருக்கும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வளாகத்தில் திரியும் நாய்களை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஒரு வாரமாக பிடித்து அப்புறப்படுத்தி வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அலுவலர் ஒருவர் கூறும்போது, “மாநகராட்சியின் 4 நாய் பிடிக்கும் வாகனங்கள் இந்த வளாகத்தில் முகாமிட்டுள்ளன. இதுவரை சுமார் 100 நாய்கள் பிடிபட்டுள்ளன. இங்கு பிடிக்கப்படும் நாய்கள் ப்ளூ க்ராஸ் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் எங்களிடம் ஒப்படைப்பார்கள். மாநாடு நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் அனைத்தையும் அவை பிடிக்கப்பட்ட இடங்களிலேயே (நந்தம்பாக்கம் வளாகத்தில்) கொண்டு வந்து விடுவோம். மாநாடு நிறைவடையும்வரை மாநகராட்சிக்கு சொந்தமான 4 நாய் பிடிக்கும் வாகனங்களும் இங்கேயே முகாமிட்டிருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT