ராணிப்பேட்டையில் அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள். 
தமிழகம்

ராணிப்பேட்டையில் அதிகாரிகளுக்கு எதிராக சுவரொட்டி: காவல் துறையினர் விசாரணை

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை வி.சி.மோட்டூர் பகுதியில் உள்ள இரண்டரை ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி குடிசைமாற்று வாரியத்துக்கு வழங்கியுள்ளதாகவும், அங்கு 300 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, வி.சி.மோட்டூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சி யர் மற்றும் சார் ஆட்சியரை கண்டித்து அந்தப்பகுதி முழுவதும் சிலர் கண்டன சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இதைப் பார்த்து நேற்று காலை வி.சி.மோட்டூர் வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து சென்று சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர்.

சுவரொட்டிகளை ஒட்டிய நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT