தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை (மே 14) சென்னை திரும்புகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், கடந்த மாதம் 27-ம் தேதி சென்னையி லிருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு வந்தார். 20 நாட்கள் கோடநாட்டில் தங்கியிருந்த முதல்வர் வரும் 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், நாளை (மே 14) கோடநாட்டிலிருந்து சென்னை புறப்படுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும், அ.தி.மு.க.வின் செயல்பாட்டை பொறுத்து கட்சியில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதம் கோடநாடு வந்து ஒரு மாத காலம் தங்கியிருந்த முதல்வர் மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் கோடநாடு வந்தார். தற்போது இருபது நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை செல்கிறார்.