கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு தலைவாசல் அடுத்த நத்தக்கரை சுங்கச் சாவடி வழியாக கால்நடையாக நடந்து வரும் பொதுமக்கள். 
தமிழகம்

வெளிமாவட்டத்துக்கு செல்ல எல்லையில் நடந்து செல்லும் பயணிகள்

செய்திப்பிரிவு

சேலம் உட்பட அனைத்து மாவட்டங் களிலும் மாவட்ட எல்லைகள் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால், அண்டைய மாவட்டங்களுக்கு செல்ல பயணிகள் குழந்தைகள் மற்றும் சுமைகளுடன் எல்லையில் நடந்து கடந்து சென்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து கடந்த 1-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனினும், மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து போக்கு வரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பேருந்துகள் அந்தந்த மாவட்ட எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகளை அடைய மக்கள் குழந்தைகள், சுமைகளை எடுத்துக் கொண்டு நடந்து, மாவட்ட எல்லையைக் கடக்கின்றனர். பின்னர் அங்கு நிற்கும் பேருந்துகளில் ஏறி, பயணம் செய்கின்றனர். இந்நிலையில், நாளை (7-ம் தேதி) தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து தொடங்குவதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் சிரமங்கள்தவிர்க்கும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT