தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார், சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் நேற்று முன் தினம் மாற்றப்பட்டனர். இன்று மீண்டும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் நேற்று முன் தினம் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமாருக்கும் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ளார்.
மாற்றம் விவரம் வருமாறு:
1. தேவகோட்டை சப்-டிவிஷன் ஏஎஸ்பி கிருஷ்ணராஜ் எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு, சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
2. சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையர் ராஜசேகரன், சென்னை காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
3. சென்னை காவல் ஆணையரகத் தலைமையிட துணை ஆணையர் விமலா, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
4 .சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையர் திருநாவுக்கரசு, டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
5. டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜி சாம்சன், உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
6. உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் சுந்தரவடிவேல், திருப்பூர் காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
7. டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு ஏஐஜி ஸ்ரீதர்பாபு, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
8. சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையர் சுதாகர், டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
9. காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார், தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு, சென்னை, எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
10. தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு. சென்னை, எஸ்.பி. முத்தரசி, சிபிசிஐடி-2 எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
11. செப்.3 அன்று சென்னை ரயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்ட வேலூர் எஸ்.பி. பிரவேஷ் குமார் மாற்றம் உத்தரவு திருத்தப்பட்டு தருமபுரி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
12. தருமபுரி எஸ்.பி. ராஜன், சென்னை ரயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.