தமிழகம்

தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி: பொன்னார்

செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று கூறியது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணியா? பாஜக தலைமையில் கூட்டணியா? என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி வெல்லும். பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி தமிழகத்தில் அமையும்.

குமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என நயினார் நாகேந்திரன் கூறியது தவறு இல்லை. பாஜக ஆட்சியில் நடந்த திட்டங்கள் அதன்பின் நடந்ததா என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT