இந்து குழும நிறுவனங்களை உள்ளடக்கிய கஸ்தூரி அண்ட்சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள என்.ரவிக்கு நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘இந்து குழும நிறுவனங்களை உள்ளடக்கிய கஸ்தூரி அண்ட்சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்.ரவிக்கு எனது இதயம்கனிந்த வாழ்த்துகள். ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர், வெளியீட்டாளராக அவரது பங்களிப்பு பாராட்டத்தக்கது. அவர் ‘தி இந்து’ நாளிதழின் மதிப்பை நிலைநிறுத்துவார். இந்து குழும இதழ்களை மேலும்உயரங்களுக்கு கொண்டுசெல்வார் என்று நம்புகிறேன். இந்து ஊழியர் சங்கம் சார்பாகவும் அவரை வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.