கரோனா பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில் முகக்கவ சம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக் காதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அவசர சட்டத் துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனாவை பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குடன் சமூக இடைவெளியை பின் பற்றுதல் போன்ற நடவடிக்கை கள் அரசால் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்று வதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என பொது சுகா தார வல்லுநர்கள் அறிவறுத்தி யுள்ளனர். மேலும், அனுமதிக் கப்பட்ட செயல்பாடுகள், பணியிடங்கள், தனிமைப் படுத்தல் மையங்களில் நிலை யான வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்ற வேண்டும்.
தொற்று ஆபத்து
இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், குறிப்பிட்ட பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகளில் இவை பின் பற்றப்படுவதில்லை. அவர் கள் மற்றவர்களுக்கு தொற்று ஆபத்தை ஏற்படுத்தி வரு கின்றனர்.
எனவே, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சில பரிந்துரைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. கரோனா பரவலை கட்டுப் படுத்த விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. ஊர டங்கு மற்றும் சமூக இடை வெளி வழிமுறைகளை மீறு வது சட்டப்படி குற்றம் என்றும், அரசின் வழிமுறைகளை அமல்படுத்துவோர் மீது தாக்குதல் நடத்துவதை தடுக் கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, 1939-ம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத் தம் செய்ய அரசு முடிவெடுத் துள்ளது.
இதன் அடிப்படையிலான கருத்துரு தமிழக அரசால் ஆளுநருக்கு அனுப்பப்பட் டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் 2-வது திருத்தச் சட்டம் தொடர்பான அவசரச் சட்டத்தை பிறப் பித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்ட நிலையில், விதிகளை மீறுவோருக்கான அபராதம் குறித்து சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
தனிமைப்படுத்தல் அறி வுறுத்தல்களை மீறுதலுக்கு ரூ.500, முகக்கவசம் அணி யாதிருத்தல் - ரூ.200, பொது இடத்தில் எச்சில் துப்புதல் - ரூ.500, சமூக இடைவெளியை பின்பற்றாதிருத்தல் - ரூ.500, ஸ்பா, ஜிம், வணிக வளா கங்கள், பொது இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதிருத்தல் - ரூ.5,000, நோய்க்கட்டுப்பாட்டு பகுதி களுக்கான விதி மீறுதலை பொறுத்தவரை தனி மனிதர் - ரூ.500, வாகனங்கள், வணிக நிறுவனங்கள் - ரூ.5,000 என்ற அளவில் அபராதம் விதிக்கப்படும்.
இதன்மூலம், அரசின் விதி களை பின்பற்றாதவர்கள் மீது அதிக அளவில் அப ராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், செப்.14-ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்படும் என தெரிகிறது.