தமிழகம்

காஞ்சி வரதாராஜ பெருமாள் கோயிலில் மூலிகை ஓவியங்களை பிரித்தெடுக்கும் பணி: 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணிப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில், சிதைந்த நிலையில் காணப்படும் மூலிகை ஓவியங்கள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என அறிய கார்பன் துகள் ஆய்வு நடத்தப்படவுள்ளதாக அறநிலை யத்துறை செயலர் கண்ணன் தெரி வித்துள்ளார். இருப்பினும் அவை 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வையத்திருமாளிகை சுவரில் மூலிகை ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. தசாவதாரங்கள், பள்ளி கொண்ட பெருமாள், 108 திவ்ய தேசங்கள், கிருஷ்ண லீலை உட்பட திருமாலின் பெருமைகளை விளக்கும் ஓவியங்கள் இவை. மூலிகை இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வண்ணக் கலவை களால் கி.பி.1569-ம் ஆண்டு இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கணித் துள்ளனர்.

இதையடுத்து இந்த ஓவியங் களை ரூ.65 லட்சம் செலவில் பழமைமாறாமல் புதுப்பிக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தொல்லியல் துறையில் ஓய்வுபெற்ற வடிவமைப் பாளர் சம்பத்குமார், ஓய்வு பெற்ற அருங்காட்சியக ஆய்வாளர் ஜெகந் நாதன் தலைமையிலான குழுவினர் இப்பணிகளை மேற்கொண் டுள்ளனர்.

இந்த ஆய்வின்போது, சிதைந்த ஓவியங்களுக்குப் பின்னால், அதற்கும் முந்தைய காலகட்டத்தில் வரையப்பட்ட மிகப்பழமையான மூலிகை ஓவியங்கள் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ‘தி இந்து’ நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி செய்தி வெளி யிடப்பட்டது. இதையடுத்து, அந்த ஓவியங்களையும் கண்டறிய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து ஓவியத்தை பிரித்தெடுக்கும் பணிகள் தொடங் கின. சிதைந்த நிலையிலிருந்த ஓவியத்தை பருத்தி ஆடையில் பதிந்து தனியே பிரித்தெடுத்தனர். அப்பகுதியில் திருவாச்சி ஓவியம் பாதியாக தெரிந்தது. ஓவியத்தின் மீதுள்ள அழுக்குகளை, ரசாயன பூச்சுகளின் உதவியோடு அகற்றி, அதை உருவாக்கிய காலநிர்ண யத்தை அளவிடும் நடவடிக்கை யையும் அப்போது தொடங்கியது.

இதுகுறித்து அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலர் ஆர்.கண்ணன் கூறியதாவது: தஞ்சை பெரிய கோயிலுக்கு பிறகு, மூலிகை ஓவியம் பிரித் தெடுக்கும் பணி, வரதராஜ பெருமாள் கோயிலில்தான் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் சோழர்களின் இறுதி காலத்தை சேர்ந்தவையாக இருக்க லாம். ஓவியத்தின் மாதிரிகளை கார்பன் துகள் ஆய்வு செய்து, கால நிர்ணயத்தை கண்டறிய உள்ளோம். இந்த ஆய்வின் முடிவில் 100 அல்லது 75 ஆண்டுகள் மட்டுமே கால அளவு மாறுபடும். எனினும், 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியமாகவே இதை கருதலாம்.

பாதியாக தெரியும் திருவாச்சி ஓவியத்தின் மீதி பகுதியை அறிவதற்காக அருகே உள்ள ஓவியத்தை பிரிக்க முடிவு செய் துள்ளோம். இதற்காக தற் போதுள்ள ஓவியத்தின் கீழே உள்ள சுண்ணாம்பு பூச்சை அகற்ற அரசிடம் அனுமதி பெறப்படும்.

மேலும் ஓவியங்களின் மீது, கேரளாவில் அமைத்துள்ளதுபோல பாலீத்தீன் ஷீட் பாதுகாப்பு தடுப்பு கள் அமைக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT