தமிழகம்

சென்னையில் நடைபெற்ற சதி திட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்?- அட்டாக் பாண்டியிடம் போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

பொட்டு சுரேஷை கொலை செய்ய சென்னை ஓட்டலில் சதித்திட்டம் தீட்டியபோது உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து அட்டாக் பாண்டியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டியை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் காவலில் உள்ள இவரிடம் இரண் டாம் நாளாக நேற்று விசாரணை நடைபெற்றது. மதுரை சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சம்ந்த் ரோஹன் ராஜேந்திரா, ஆய்வாளர்கள் கோட்டைச்சாமி, ராஜபாண்டியன், பெத்துராஜ் தலைமையிலான தனிப்படையினர் நேற்று விசாரணையை தொடர்ந் தனர்.

அட்டாக் பாண்டி விசாரணை யில் தெரிவித்தது குறித்து போலீ ஸார் கூறியதாவது:

தன்னை அழகிரியிடம் இருந் தும், திமுகவில் இருந்தும் ஒழித்து விட வேண்டும் என்பதில் பொட்டு சுரேஷ் திட்டமிட்டு செயல்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த எனது ஆதரவாளர்கள் பொட்டு சுரேஷை கொலை செய்தனர் என்றவர் தனது உத்தரவின்பேரில்தான் கொலை நடந்தது என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மறுத்தார்.

இதையடுத்து 12.1.2013-ல் சென்னை ஓட்டல் ஒன்றில் அட்டாக் பாண்டி தங்கிருந்தபோதுதான் கொலைக்கான சதி உருவானது. இதுகுறித்து ஏற்கெனவே இவ்வழக் கில் கைதானோர் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர். ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களைக் காட்டி அட்டாக் பாண்டியிடம் விசாரணை நடந்தது.

அப்போது ஆதரவாளர்கள் பலர் சந்தித்தது உண்மைதான். எனது நிம்மதியை பொட்டு சுரேஷ் கெடுத்துவிட்டதால் அவரை கொலை செய்தனர் என அட்டாக் பாண்டி தெரிவித்தார் என்றனர். கொலை சதியில் அட்டாக் பாண் டியின் நேரடி தொடர்பு குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ராஜ மரியாதை

போலீஸார் அட்டாக் பாண்டியை நாற்காலியில் அமர வைத்து விசாரிக்கின்றனர். மூன்று வேளையும் அட்டாக் பாண்டி விரும்பும் உணவு வகைகள் உட்பட விருப்பமான அனைத்தையும் வாங்கித் தருகின்றனர். இது குறித்து நேற்று அட்டாக் பாண்டியை சந்தித்த வழக்கறிஞர் என்.தாமோதரன் கூறும்போது, போலீஸார் எந்த தொந்தரவும் தராமல் நல்ல முறையில், மரியாதையுடன் விசாரிக்கின்றனர். மிரட்டலோ, தாங்கள் விருப்பியதைத்தான் சொல்ல வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவோ இல்லை எனத் தெரிவித்ததாகக் கூறி்னார்.

SCROLL FOR NEXT