தமிழக நிலச் சீர்திருத்த சட்டத் துக்கு எதிராக பிஆர்பி நிறுவனம் வைத்திருக்கும் சொத்துகளை பறிமுதல் செய்து நிலமற்ற ஏழை களுக்கு வழங்கக்கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
மதுரை நொண்டிக்கோயில் பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
மதுரை மாவட்டத்தில் 49 வருவாய் கிராமங்களில் 175 கிரானைட் குவாரிகள் அமைந் துள்ளன. மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடைபெற்ற தாக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் விசாரணை நடத்தினர். பின்னர், பிஆர்பி உள்பட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸார் தெரிவித்துள்ள கணக் குப்படி பிஆர்பி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் ரூ.25000 கோடி மதிப்புக்கு 24300 ஏக்கர் நிலம் வைத்துள்ளனர்.
தமிழக நிலச் சீர்த்திருத்த சட்டத் தின்படி, 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் மட்டும் இருக்கலாம். ஒரு குடும்பத்தில் 5 பேருக்கும் அதிகமானோர் இருந்தால், கூடுத லாக உள்ள ஒவ்வொருக்கும் தலா 5 ஏக்கர் நிலம் இருக்கலாம்.
மேலூர் வட்டத்தில் பிஆர்பி நிறுவனத்துக்கு 1834 ஏக்கர் நிலம், மதுரை வடக்கு வட்டத்தில் 934 ஏக்கர் நிலம் வைத்திருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டபோது வட்டாட்சியர்கள் தகவல் அளித்தனர். இந்த இரு வட்டங்களில் மட்டும் பிஆர்பி நிறுவனம் 2769 ஏக்கர் நிலம் வைத் துள்ளது. பிஆர்பி நிறுவனம் நில சீர்திருத்த சட்டத்தில் கூறப் பட்டுள்ளதை காட்டிலும் அதிகப் படியான நிலம் வைத்துள்ளது.
எனவே, பிஆர்பி நிறுவனம் மீது நில சீர்திருத்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், கூடுதலாக நிலத்தை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கவும் உத்தர விட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர்கள் பி.ரத்தினம், ஏ.ராகுல் ஆகியோர், கிரானைட் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த மனுவையும் அங்கு மாற்ற வேண்டும் என்றனர். இதையடுத்து மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சகாயம் பதிலளிக்க உத்தரவு
உயர் நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை தெரிவித்ததற்காக மதுரை ஆட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மதுரை நிலையூரில் சகாயம் ஆட்சிய ராக இருந்தபோது 17 பேருக்கு போலி பட்டா வழங்கப்பட்டது.
இதனால் அந்த 17 பேருக்கும் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதில் அளித்த போது ஆட்சியரும், நேர்முக உதவியாளரும் தவறான தகவலை தெரிவித்துள்ளனர் எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுவுக்கு 3 வாரத் தில் பதிலளிக்க சட்ட ஆணையர் சகாயம், ஆட்சியர், நேர்முக உதவி யாளர், தெற்கு வட்டாட்சியர் ஆகியோ ருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.