கரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிலிருந்தபடியே இணைய வழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘வர்மம் தெரபி’ எனும் ஆன்லைன் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்தப் பயிற்சி தொடர்ந்து இன்னும் 4 நாட்கள் நடைபெற உள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத்தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘வர்மம் தெரபி’ எனும் 5 நாட்கள்ஆன்லைன் பயிற்சியை நடத்துகிறது. நேற்று தொடங்கிய இந்தப் பயிற்சி செப்.6-ம் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த வர்மம் தெரபி பயிற்சியில் புகழ்பெற்ற வர்மம் தெரபி மருத்துவர் தர்மேஷ் குபேந்திரன் பேசியதாவது: “மனித உடம்பென்பது தசை, எலும்புகள், தசை நார், நரம்பு, மூட்டு மற்றும் இரத்த நாளங்களின் சந்திப்பு புள்ளியாக உள்ளது. நமது உடல் சீராக இயங்குவதற்கு உடலில் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர் நிலை உள்ளது. வர்மக் கலை என்பது ஒரு போர்க்கலையைப் போன்றது. வர்மம் பற்றி தெரிந்துகொள்ள எலும்புகள் பற்றியும், தசைகளைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். படு வர்மம், தொடு வர்மம் என வர்மம் இரு வகைப்படும். உணர்வுபூர்வமாக ரசித்து செய்யக்கூடியது இந்த வர்மக் கலையாகும்” என்றார்.
இந்த 5 நாட்கள் பயிற்சியிலும் வர்மம் தெரபியின் நுட்பங்கள், நோய்களுக்கேற்ப வர்மம் தெரபி சிகிச்சை அளிக்கும் முறைகள், சுயமாக வர்மம் சிகிச்சையை எப்படி மேற்கொள்வது, வர்மம் தெரபியிலுள்ள படிப்புகளைப் பற்றியும் விரிவான முறையில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/varmamtheraphy.php என்ற இணையதளத்தில் ரூ.589 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு அனைவரும்பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.