தமிழகம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பொது மக்கள் தரிசனம் தொடக்கம்

செய்திப்பிரிவு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பவுர்ணமி நாளான நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடை பெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சித்தர் பீடத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு உலக நன்மைக்காகவும், கரோனா முற்றிலும் விலகி மக்கள் நலம் பெற வேண்டியும் பெண்கள் நடத்தும் மகா கூட்டு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் குரு போற்றி, உலக நலன் வேண்டி சங்கல்பம், நூற்றியெட்டு ஆதிபராசக்தி அம்மன் போற்றி மற்றும் மந்திரக்கூறு மந்திரங்கள் படிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சி ‘மேல்மருவத்தூர் சித்தர் பீடம்’ யூ-டியூப் சேனலில் நேரலையாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணி முதல் 7 மணிவரை ஒளிபரப்பப்பட்டது. ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர் தேவி ரமேஷ் செய்திருந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT