தமிழகம்

சாவி இல்லாததால் பறிமுதல் செய்த லாரிகளை குவாரியிலேயே காவல் காக்கும் போலீஸார் 

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மணல் அள்ளச் சென்ற லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தநிலையில், சாவி இல்லாததால் லாரிகளை யாரும் எடுத்து செல்லாதபடி குவாரியிலேயே போலீஸார் காவல் காத்து வருகின்றனர்.

மானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் வைகை ஆற்றை ஒட்டி தனியாா் பட்டா நிலத்தில் உபரி மண் அள்ள அனுமதி பெற்று லாரிகளில் மணல் கடத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மானாமதுரை இன்ஸ்பெக்டர் சேது தலைமையிலான போலீஸார் கள்ளா்வலசை கிராமத்துக்குச் சென்றனர்.

அங்கு மணல் அள்ளுவதற்காக நின்று கொண்டிருந்த 16 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை விட்டுவிட்டு ஓட்டுநர்கள் தப்பியோடினர்.

இதையடுத்து லாரிகளையும், பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் 6 லாரிகளில் மட்டுமே சாவி இருந்ததால் அவற்றை போலீஸார் சிப்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

மற்ற லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை யாரும் எடுத்து செல்ல முடியாதபடி 2 நாட்களாக குவாரியிலேயே போலீஸார் காவல் காத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT