புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இங்கு சிகிச்சை பெறுவோர், ‘கழிவறை வசதி சரியில்லை; தூய்மையாகஇல்லை’ என்று வாட்ஸ்அப்பில் புகார் தெரிவித்தி ருந்தனர். இதையடுத்து கடந்த வாரங்களில் இருமுறை அம்மருத்துவமனைக்கு சென்று, ஆய்வு செய்த புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அங்கிருந்த நோயாளிகளிடம் குறை களை கேட்டறிந்தார்.
இந்நிலையில் நேற்று 3 வது முறையாக அந்த மருத்துவமனைக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் சென்றார். கரோனா தொற்றாளர்களிட்ம் மீண்டும்குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்தகழிவறையை சென்று பார்த்தார். அது சுத்தமாக இல்லாததை அங்கிருந் தோரிடம் சுட்டிக் காட்டிய அமைச்சர், அவரே இறங்கி சுத்தம் செய்தார்.
அமைச்சர் இப்படி செய்வதைக் கண்டு அங்கிருந்த ஊழியர் ஒருவர், தான் சுத்தம் செய்வதாக கூறவும்,, "நீங்கள் சுத்தம் செய்யாமல் விட்டதால் தான் அந்த வேலையை நான் செய்ய வேண்டி யுள்ளது. நாளையும் வருவேன். நீங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் நான் இறங்கி சுத்தம் செய்வேன்" என்று கூறி விட்டுச் சென்றார்.