வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா இன்று(ஆக.29) தொடங்குகிறது. விழா நிகழ்ச்சி களை இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய பேராலய நிர்வாகம் சார்பில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று(ஆக.29) கொடி யேற்றத்துடன் தொடங்கி செப்.8-ம் தேதி வரை நடை பெற உள்ளது. நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகையை கண் காணிப்பதற்காக மாவட்ட எல்லைகளில் 21 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் 1,100 பேர் கண் காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து கொண்டே விழா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பேராலயத்தின் சார்பில் www.vailankannishrine.net, www.vailankannishrine.tv ஆகிய இணையதளங்கள் மூல மாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, மாவட்ட நிர் வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.