கருப்பாநதி அணை 
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழைக் காலமாகும். இந்த காலத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

இருப்பினும் போதிய மழை பெய்யவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இதனால், விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் வேகமாக நிரம்பின.

இந்நிலையில், கடந்த 15 நாட்களாக தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருகிறது.

வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை 4 மணி நேரத்தில் கருப்பாநதி அணைப் பகுதியில் 6 மி.மீ., சிவகிரியில் 5 மி.மீ., சங்கரன்கோவிலில் 4 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் மழை இல்லை.

நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT