‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், ரோட்டரி சங்கம்-3000 இணைந்து நடத்தும் ‘நலம் 2020’ எனும் ஆரோக்கியம் குறித்த ஆன்லைன் நிகழ்ச்சி நாளை (ஆக-28) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறவுள்ளன.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனஅனைவரும் ஆரோக்கியம் குறித்து அறிந்துகொண்டு பயன்பெறும் வகையில் இணைய வழியிலான ‘நலம் 2020’ எனும் நிகழ்ச்சி நாளை (ஆக.28) முதல் 3 நாட்கள் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது.
முதல் நாள் நிகழ்வில், சென்னைமருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணன் ‘விந்தை எந்திரம்’ எனும் தலைப்பில்சிறுநீரகப் பாதிப்புகள் குறித்தும், அதற்கான உணவு முறைகள் மற்றும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பேசுகிறார்.
2-ம் நாளில் கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் இதயவியல் நிபுணரான மருத்துவர் பிரியா குபேந்திரன் ‘இதயத்தை திருடாதே’ என்னும் தலைப்பில் இதயப் பாதிப்புகள், அதன் அறிகுறிகள், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து உரையாற்றுகிறார்.
3-ம் நாளில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நீரிழிவு நோய் துறை இயக்குநர் மருத்துவர் சண்முகம் ‘இனிக்கட்டும் வாழ்வு’ என்னும் தலைப்பில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் குறித்தும், அதற்கான உணவுமுறைகள் மற்றும் வாழ்க்கைச் சூழல் குறித்தும் பேசுகிறார்.
இந்நிகழ்வை ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார் ஒருங்கிணைக்கிறார். 3 நாட்களும் பங்குபெறும் பார்வையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம். இணைப்புக்கான Zoom ID – 708 121 0 121 (password – sigaram). கூடுதல் தகவல்களுக்கு 9994119002 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். ‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், ரோட்டரி சங்கம்-3000 இணைந்து நடத்துகின்றன.