தமிழகம்

ஓபிஎஸ் உட்பட11 எம்எல்ஏக்களிடம் காணொலி காட்சி மூலம் பேரவைத் தலைவர் தனபால் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களிடம் காணொலி காட்சி மூலம் பேர வைத் தலைவர் பி.தனபால் இன்று விசாரணை நடத்தி விளக்கம் பெறுகிறார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அதன்பிறகு அதிமுக 2 அணிகளாக பிரிந் தது. முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், 2017 பிப்.18-ம் தேதி சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக் கெடுப்பு நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் திலும் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சட்டத் தின் அடிப்படையில் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுப் பார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, ஓபிஎஸ் உள் ளிட்ட 11 பேரையும் நீதிமன் றமே தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தரப் பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, பேரவைத் தலைவருக்கு முதல்வர் பழனி சாமி எழுதியிருந்த கடிதத்தில், ‘அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரியுங்கள் என ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்ட 11 உறுப்பினர்களுக்கு அரசு தலைமை கொறடா எந்த உத்தரவையும் பிறப் பிக்கவில்லை. எனவே, அவர் கள் 11 பேரையும் தகுதிநீக்கம் செய்யும் கேள்வியே எழ வில்லை. 11 பேரும் அதிமுக வினராகதான் பேரவையில் செயல்பட்டனர். புகார்தாரர்கள் அதிமுகவில் இல்லாததால், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதி மன்ற அறிவுறுத்தல்படி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக் களிடமும் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் உள் ளிட்ட 11 பேரிடமும் காணொலி காட்சி மூலம் பேரவைத் தலை வர் பி.தனபால் இன்று விசா ரணை நடத்தி அவர்கள் தரப்பு விளக்கத்தை பெறுகிறார். இதற்காக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், உறுப்பினர்கள் அல்லது அவர்களது வழக் கறிஞர்கள் பங்கேற்று விளக் கம் அளிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT