திருப்போரூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்.படம்: கோ.கார்த்திக் 
தமிழகம்

திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் 2021 மார்ச்சில் நிறைவுபெறும்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல்

செய்திப்பிரிவு

திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன்பேரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை தொடங்கின.

இத்திட்டத்தின் மூலம் காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் 2 கழிவுநீர் உந்து நிலையங்கள், நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம், பேரூராட்சி பகுதியில் 23 கி.மீ நீளத்துக்கு பாதாள சாக்கடை குழாய் புதைக்கும் பணிகள் மற்றும் 861 சாக்கடை புழை அமைக்கும் பணிகள்தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், குழாய் புதைக்கும் பணிகள் உட்பட 75 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் சரியான முறையில் மண்கொட்டாததால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT