ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராபின்(26). இவர் மீது கொள்ளை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 முறை குண்டர்தடுப்பு சட்டத்தின்கீழ் சிறை சென்றவர். ராபின் கடந்த டிசம்பர் மாதம், பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகரன் முன்பு ஆஜராகி, தான் திருந்தி வாழ்வதாகக் கூறி உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அருண்குமார் என்பவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, நன்னடத்தை விதியை மீறிய குற்றத்துக்காக ராபினை, மேலும் 560 நாட்கள் சிறையில் அடைக்க பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.