கோவை மாவட்டம் பொள்ளாச்சியி லிருந்து வால்பாறை செல்லும் சாலையில், இரவு நேரங்களில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி ஆழியாறிலிருந்து, வால்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் கடந்த சில வாரங்களாக தந்தத்துடன் இருக்கும் ஒற்றை யானை உலவுகி றது.
இது, அவ்வழியாகச் செல்லும் வாகனங்களை துரத்தி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் அட்டகட்டி பகுதியில், 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நின்றிருந்த காட்டு யானை, அவ்வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து, விரட்டியுள்ளது.
உயிருக்குப் பயந்த வாகன ஓட்டிகள், அட்டகட்டி பகுதியில் உள்ள நகராட்சி சோதனைச்சாவடியில் இரவுப் பணியில் இருந்த பணியாளர்க ளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற பணியாளர்கள் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையை டார்ச் அடித்தும், சப்தம் போட்டும் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வனப் பகுதிக்குள் விரட்டினர். பின்னர், வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
அட்டகட்டி பகுதியில் வாகனங்களை மறிக்கும் காட்டு யானையை, வனப் பகுதிக்குள் விரட்டவும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் வனத் துறையினர் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.