தமிழகம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை

செய்திப்பிரிவு

டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

தமிழகம் முழுவதும் 4,300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. கரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால், சனிக்கிழமைகளில் விற்பனை 2 மடங்கு நடைபெறும்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மது அருந்துவோர் கூட்டம் அலைமோதியது. பலரும் 2 நாட்களுக்கு தேவையான பானங்களை வாங்கி சென்றனர். சென்னைகடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மதுரையில் அதிகபட்சம்

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.250 கோடியே 25 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின. இதில், மண்டலவாரியாக மதுரையில் அதிகபட்சமாக ரூ.52.45 கோடி,திருச்சியில் ரூ.51.27 கோடி, சென்னையில் ரூ.50.65 கோடி, சேலத்தில் ரூ.49.30 கோடி, கோவையில் ரூ.46.58 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT