இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது கூட்டம், ஊர்வலம், கூட்டமாக சென்று சிலைகள் கரைக்கும் நிகழ்வு ஆகியவை இருக்காது என ஏற்கெனவே அறிவித்துள்ளோம். விழா தொடர்பாக உயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.
இவற்றை கருத்தில்கொண்டுபாதுகாப்போடு ஒருநாள் மட்டும் விழா கொண்டாடப்படும். தனியார் இடங்கள், வீடுகள், கோயில்களில் விநாயகர் சிலைகள் வைத்து, அவரவர் ஏற்பாடுகளில் இன்று மாலையே சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரிகள் இதற்கு ஒத்துழைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.